ஆளுமை:கணபதிப்பிள்ளை, சுப்பர்

From நூலகம்
Name கணபதிப்பிள்ளை
Pages சுப்பர்
Birth 1924.08.24
Place அல்வாய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, சுப்பர் (1924.08.24 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பர். இவர் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரைத் தனது மானசீகக் குருவாக ஏற்று கல்வி பயின்றார்.

கண்கள் என்ற முத்திங்கள் இதழின் ஆசிரியராக இருந்த இவர், கம்பனும் பாரதியும், அறுசுவைக் குறுங்கதைகள், மங்கை சீதா போன்ற நூல்களை இயற்றியுள்ளார். மேலும் நாமிருவர், பிச்சைக்காரரின் வாழ்வு, அண்ணாச்சி வா, கண்ணகி சிலை தந்த கதை, தமயந்தி, ஏகலைவன், பழிக்குப் பழி, சிந்திய சிலம்பு, கருணாகரப் பரணி, ஒரு குடும்பப் பிரிவு, விக்ரமன், பத்தாவது பெண் முதலிய நாடகங்களை எழுதி நெறிப்படுத்தியுமுள்ளார்.

1958 ஆம் ஆண்டு இந்திய உயர்ஸ்தானிகரால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பெற்ற அணுசக்தியின் பயன் என்ற கட்டுரைப் போட்டியில் இவருக்கு முதல் பரிசாக சான்றிதழும், தங்கப்பதக்கமும் கிடைத்ததோடு, 2007 ஆம் ஆண்டில் வடமராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையும் தமது வருடாந்த கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் இவரைக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 06