ஆளுமை:கதிர்காமநாதன், செல்லையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிர்காமநாதன்
பிறப்பு 1942
இறப்பு 1972.09.01
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிர்காமநாதன், செ. (1942 -1972.09.01 ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் வேதாரணியேசுவரர் வித்தியாலயத்திலும் விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்று, 1963 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவரது முதற் சிறுகதைத் தொகுதி 'கொட்டும்பனி' 1968 இல் வெளிவந்தது. அவ்வாண்டுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு இத்தொகுதிக்குக் கிடைத்தது. 1942 ஆம் ஆண்டில் வங்காளத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தின் பின்னணியாகக் கொண்டு கிருஷ்ணசந்தரால் எழுதப்பட்ட உருது மொழி நாவலை கதிர்காமநாதன் "நான் சாகமாட்டேன்" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். இது வீரகேசரி பிரசுரமாக வெளியிடப்பட்டது. மூவர் கதைகள் என்ற நூலையும் இவர் வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 169-170
  • நூலக எண்: 10206 பக்கங்கள் 45-46
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 09-11
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 235-240
  • நூலக எண்: 5973 பக்கங்கள் 29-32