ஆளுமை:கந்தசாமி, வயிரமுத்து

From நூலகம்
Name கந்தசாமி
Pages வயிரமுத்து
Pages இலட்சுமி
Birth 1941.08.10
Place வரணி
Category எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, வயிரமுத்து (1941.08.10 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வரணியைச் சேர்ந்த எழுத்தாளர், நாடகக் கலைஞர். இவரது தந்தை வயிரமுத்து; தாய் இலட்சுமி. இவர் தனது ஆரம்பக் கல்வியை வரணி அரசினர் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலை, உயர்தரக் கல்வியை நீர்வேலி தெற்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி,யாழ்ப்பாணம் வரணி மகாவித்தியாலயம் ஆகியவற்றில் பெற்றார். பின்னர் ஆசிரியர் சேவையில் இணைந்து அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட நான்கு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளும் இணைந்து 1964 ஆம் ஆண்டில் விசாலமான கலைவிழாவொன்றை நடத்தியது. இவ்விழாவில் நல்லூர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பங்களிப்பாக எப்படி நாடகம் என்னும் நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்நாடகத்தில் இவர் கதாநாயகி பாத்திரமேற்று நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் நாடகமாகும். மேலும் அணையா விளக்கு என்னும் நாடகத்திலும் பெண் பாத்திரமேற்று நடித்தார்.

இவர் முதலில் ஒன்றிய உள்ளம் என்னும் நாடகத்தைத் தானே எழுதி நெறிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து பேயோட்டம், காசியப்பன், அழகிய மலர், வசந்த வாழ்வு, ஓதோலோ, நாட்டுக்கு நான் என்ன செய்தேன் உட்பட மேலும் பல நாடகங்களைப் படைத்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 97-102