ஆளுமை:கனகசபாபதி, கந்தையா

From நூலகம்
Name கனகசபாபதி
Pages கந்தையா
Birth 1915
Place யாழ்ப்பாணம்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகசபாபதி, கந்தையா (1915 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை கந்தையா. பலாலி ஆசிரியபயிற்சிக் கலாசாலையில் 1952 -1971 ஆம் ஆண்டு வரை ஓவியப் போதனாசிரியராக இருந்தார். எஸ்.ஆர்.கேயின் அபிமான மாணவரான இவர், முறையான ஓவியப் பயிற்சியை வின்ஸர் ஆட் கிளப்பில் பெற்றார். இவர் ஓவிய மாணவனாகவும் விரிவுரையாளராகவும் இருந்த காலத்திலேயே இவரது ஓவியங்களில் பெரும்பாலானவை வரையப்பட்டன.

இவரது நிகழ்ச்சித் சித்தரிப்பு ஓவியங்களில் இளைப்பாறுதல், மாவிடித்தல், இரு பெண்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. நிலைப்பொருள் ஓவிய வரைவிலும் தன் ஆளுமையை வெளிக்காட்டிய கனகசபாபதியின் ஓவியங்களில் தைலவர்ணத்தில் 1947 இல் வரையப்பட்ட பூங்கொத்து ஓவியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Resources

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 31-32