ஆளுமை:கனகசபை, சின்னத்தம்பி

From நூலகம்
Name கனகசபை
Pages சின்னத்தம்பி
Pages சேதுப்பிள்ளை
Birth
Place புங்குடுதீவு
Category வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகசபை, சின்னத்தம்பி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவரது தந்தை சின்னத்தம்பி; இவரது தாய் சேதுப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவிலும் உயர்கல்வியைத் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்திலும் பயின்றார். 1949 ஆம் ஆண்டில் மாகோவில் வர்த்தகத் தொழிலை மேற்கொண்டமையால் மாகோ கனகர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டார்.

வர்த்தகத் துறை மூலம் உயர்ந்த இவர், தான் பிறந்த மண்ணின் வட்டார அங்கத்தவராகவும் வல்லன்பதி அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில் அறங்காவலர் சபைத் தலைவராகவும் இருந்து இரண்டு முறை இக்கோவில் கும்பாபிஷேகத்தைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில் வசித்து வரும் காலங்களில், தனது வீட்டுக்கு அருகாமையில் பெருங்காடு அமெரிக்க மிஷன் பாடசாலையை விஸ்தரிப்பதற்காகக் காணி தேவைப்பட்டபொழுது, தனது வீட்டோடு சேர்ந்த காணியின் சிறு பகுதியைக் கொடுத்து, அங்கு கல்வி பயின்ற மாணவர்களுக்கு இன்னும் பல வகுப்புக்கள் உருவாகக் காரணமாக இருந்தார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 264-265