ஆளுமை:கனகசபை, முத்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகசபை

தாய்=முத்தையா

பிறப்பு 1925.03.12
ஊர் கொழும்புத்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கனகசபை, முத்தையா (1925.03.12 - ) யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை முத்தையா. நவீன, மரபு ரீதியான ஓவியங்களை வரைந்துள்ள இவர் ஆசிரியராகவும், கைப்பணிக் கல்வியதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். சுமார் 70க்கும் மேற்பட்ட ஓவியங்களை நெய் வர்ணத்தினால் வரைந்து யாழ்ப்பாண இந்துக் கல்லூரி, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ்ப்பாண நூல் நிலையம் ஆகிய இடங்களில் இவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

நிகழ்ச்சித் சித்தரிப்பை முதன்மைப்படுத்தும் இவரது ஓவியங்களில் வண்டிற்சவாரி, நல்லூர் தேர்த் திருவிழா, சந்தைக்குச் செல்லும் மீன் விற்கும் பெண்கள், பறையடித்தல், சாமி காவுதல், மழையில் நனைந்த ஆட்டை இழுத்துச் செல்லுதல், தோணியில் பாய் இளக்குதல் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும்.

2004இல் மாகாண ஆளுநர் விருதையும், 2005இல் கலாகீர்த்தி எனும் ஜனாதிபதி விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10375 பக்கங்கள் 03-08
  • நூலக எண்: 2970 பக்கங்கள் 30
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 240