ஆளுமை:கலைவாணி, இராஜகுமாரன்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:12, 10 ஜனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (படைப்புகள்)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலைவாணி
தந்தை செல்வரட்ணம்
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1966.08.14
இறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்-மாதகல்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலைவாணி, இராஜகுமாரன் (1966.08.15) திருகோணமலை, அன்புவழிபுரத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வரட்ணம்; தாய் சிவபாக்கியம். தந்தையின் வேலை இடமாற்றங்கள் காரணமாக முதலாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையான காலப்பகுதிக்குள் பதினொரு பாடசாலைகளில் கல்விகற்றுள்ளதாக தெரிவிக்கிறார். கலைவாணி என்னும் இயற்பெயரை கொண்ட இவர் தமிழ்நதி என்னும் புனைபெயரினாலேயே அனைவராலும் அறியப்படுகிறார். உயர்தரத்தில் திருகோணமலை ஸ்ரீ சண்முக வித்தியாலயத்தில் கல்விகற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டத்தாரியாவார். எழுத்துத்துறைக்கு 1986ஆம் ஆண்டு பிரவேசித்ததாக கூறுகிறார். 1986ஆம் ஆண்டு கவிதை எழுதத் தொடங்கினாலும் 1996ஆம் ஆண்டு இவரின் ஆக்கங்கள் அச்சிப் பதிப்பாக வெளியாகியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் தமிழ்நதி.

பெற்ற விருதுகள்:

1.அமுதன் அடிகளார் இலக்கிய விருது (பார்த்தீனியம் நாவலுக்காக, 2016) 2.இயக்குநர் மணிவண்ணன் விருது (பார்த்தீனியம் நாவலுக்காக, 2016) 3.அவள் விகடன் ‘இலக்கிய ஆளுமை’விருது, 2017 4.படைப்பூக்க விருது (எஸ்.ஆர்.வி.பள்ளி. திருச்சி, 2018)

குறிப்பு : மேற்படி பதிவு கலைவாணி, இராஜகுமாரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

  • சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள்)
  • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது (சிறுகதைகள்)
  • ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் (கட்டுரைகள்)
  • கானல் வரி (குறுநாவல்)
  • இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்)
  • அதன்பிறகும் எஞ்சும் (கவிதைகள்)
  • பார்த்தீனியம் (நாவல்)
  • மாயக்குதிரை (சிறுகதைகள்)

வளங்கள்

  • நூலக எண்: 2233 பக்கங்கள் 28
  • நூலக எண்: 2261 பக்கங்கள் 28
  • நூலக எண்: 2278 பக்கங்கள் 20
  • நூலக எண்: 8333 பக்கங்கள் 36
  • நூலக எண்: 9997 பக்கங்கள் 26
  • நூலக எண்: 10332 பக்கங்கள் 33-36
  • நூலக எண்: 15463 பக்கங்கள் 23
  • நூலக எண்: 15467 பக்கங்கள் 58-62
  • நூலக எண்: 15470 பக்கங்கள் 16-19

வெளி இணைப்புக்கள்


….