ஆளுமை:கார்த்திகா, கணேசர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:06, 19 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கார்த்திகா ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கார்த்திகா கணேசர்
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. கார்த்திகா யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியார். நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையா அவர்களின் மாணவியான இவர் பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்திய மாநிலமான தமிழ்நாடு சென்று வழுவூர் இராமையா பிள்ளையிடம் மரபுவழி நடனத்தை குருகுல முறையில் கற்றுத் தேறினார்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக தலைநகர் கொழும்பில் சிறந்த ஒரு ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கி பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர் 1969ஆம் ஆண்டு தமிழர் வளர்த்த ஆடற்கலை என்ற நூலினை வெளியிட்டார். இவரால் எழுதப்பட்ட இரண்டாவது நூல் காலந்தோறும் நாட்டியக்கலை என்பதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 147