ஆளுமை:கார்மேகம், எஸ். எம்.

From நூலகம்
Name கார்மேகம்
Birth 1939.11.19
Pages 2005.01.18
Place கல்மதுரை
Category ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்மேகம், எஸ். எம். (1939.11.19 - 2005.01.18) மலையகம், கொட்டக்கலை, கல்மதுரை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் தமிழகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். அட்டன் புனித பொஸ்கோ கல்லூரியில் கல்வி பயின்றவர். மலையக மேம்பாட்டிற்காக பத்திரிகைத்துறை மூலம் சேவையாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர். வீரகேசரி, தமிழக தினமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகக் கடமையாற்றியவர். தினமணி நாளிதழின் சென்னைப் பதிப்பில் 1988 முதல் 1997 வரை பல்வேறு பொறுப்புகளுடன் பணியாற்றினார். கார்வண்ணன் என்னும் புனைபெயரில் தோட்ட மஞ்சரி பகுதியில் பல கட்டுரைகளை எழுதியும் பல கல்விமான்களையும் அரசியல்வாதிகளையும் அப்பகுதியில் எழுதவைத்தும் மலையக இளைஞர்களை விழிப்படையச் செய்தவர்.

ஒரு நாளிதழின் நெடும்பயணம், கண்டி மன்னன், ஈழத்தமிழரின் எழுச்சி ஆகியன இவரது நூல்கள். இவர் மலையக சிறுகதைகள் அடங்கிய கதைக் கனிகளின் தொகுப்பாசிரியர். இவர் வீரகேசரியில் இணைந்த பிறகு கல்மதுரையான் என்னும் புனைபெயரில் தேயிலையின் கதை கட்டுரையை தொடராக எழுதினார். ஜெயதேவன் என்னும் புனைபெயரில் நான் பிறந்து வளர்ந்த இடம் கட்டுரையை எழுதினார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை ஆரம்பித்து மலையக எழுத்தாளர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்குரியவர். ஆறு சிறுகதைப் போட்டிகளை நடத்திய சிறப்புக்குரியவர்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 390-391

வெளி இணைப்புக்கள்