ஆளுமை:குழந்தைவேலு, திருநாகப்பர்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:40, 11 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குழந்தைவேல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குழந்தைவேலு
தந்தை திருநாகப்பர்
பிறப்பு 1938.04.10
ஊர் முல்லைத்தீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

'குழந்தைவேலு, திருநாகப்பர் (1938.04.10) முல்லைத்தீவு முள்ளியவைளை கிழக்கைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை திருநாகப்பர். 1958ஆம் ஆண்டு கலை உலகிற்குள் பிரவேசித்தார்.

சிறுவயது முதலே கலையில் ஈடுபாடுடையவராகக் காணப்பட்டார். இவரின் பேரன் அண்ணாவியார் சின்னத்தம்பி அவர்களின் ஆர்மோனியத்தை வாசித்து பழகினார். பாடசாலைகளில் நடைபெறும் கலை நிகழ்வுகளிற்கு இவரே ஆர்மோணியம் வாசிப்பார். வற்றாப்பளை கனகசபாபதி அண்ணாவியாரிடம் முறைப்படி ஆர்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் காத்தவராயன் சிந்துநடைகூத்து, இசைநாடகங்ளான அரச்சந்திரா, கோவலன் கண்ணகி, அல்லி அருச்சுனா போன்ற கலை நிகழ்வுகளுக்கு ஆர்மோனியம் வாசித்துள்ளார். அத்துடன் நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களிற்கு பக்க வாத்தியம் வாசித்துள்ளார். முள்ளியவளை கலைமகள் வில்லிசை் குழுவினருக்கு ஒரு வருடத்திற்கு மேலாக ஆர்மோனியம் வாசித்துள்ளார். போரின் கோரப்பிடியின் காரணமாக இவரின் இரண்டு கண்களும் பார்வை இழந்துவிட்ட நிலையில் கோவில்களில் உடுக்கு வாத்தியம் வாசித்து வருகின்றார்.

விருதுகள்

முல்லைப்பேரொளி – கரைதுரைப்பற்று கலாசார பேரவை