ஆளுமை:கொலஸ்ரிகா, கோபாலசிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கொலஸ்ரிகா, கோபாலசிங்கம்
தந்தை -
தாய் -
பிறப்பு 1964.09.30
இறப்பு -
ஊர் கொழும்புத்துறை
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கொலஸ்ரிகா, கோபாலசிங்கம் (1964.09.30) யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த இசைக் கலைஞர். சிறுவயதிலிருந்தே இசையில் நாட்டம் கொண்ட இவர் பாடகியாக மட்டுமல்லாது வயலின், கீபோர்ட் வாத்தியங்களையும் வாசிக்கும் திறமை கொண்டவராவார். அத்தோடு வட இலங்கை சங்கீத சபையின் தரம் -05 பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார்.

1981ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அரவீரம் எனும் நிகழ்ச்சியில் பாடல் ஒன்றினை எழுதி இசையமைத்து பாடி பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். மேலும் 1995இல் இளைய சகோதரனின் பிரன்ட்ஸ் இசைக் குழுவில் 2003ஆம் ஆண்டு தொடக்கம் பாடத் தொடங்கினார். இது தவிர சப்தஸ்வரா, சாகித்தியம் போன்ற இசைக் குழுக்களிலும் பாடியுள்ளார். இவரின் கலைச்சேவைக்காக மெல்லிசைக் குயில் எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.