ஆளுமை:கோகிலமணி, ஜெகானந்தராசா

From நூலகம்
Name கோகிலமணி, ஜெகானந்தராசா
Pages டானியல்
Birth 1951.06.29
Place அரியாலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோகிலமணி, ஜெகானந்தராசா (1951.06.29 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட கர்நாடக இசைக் கலைஞர். இவரது தந்தை டானியல். சங்கீத டிப்ளோமா, பட்டப் படிப்பின் கல்வி டிப்ளோமா, வட இலங்கைச் சங்கீத சபையில் சங்கீத ஆசிரியர் தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தி பெற்றதன் மூலம் இசைக்கலைமாணி, கலாவித்தகர் பட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

1984 ஆம் ஆண்டு சங்கீத ஆசிரியையாகக் கிளிநொச்சி புனித பற்றிமா றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையில் நியமனம் பெற்று, 1991 ஆம் ஆண்டு வரை அங்கு பணியாற்றிப் பின்னர் 1991 இல் இருந்து யாழ்ப்பாணம் கனகரத்தினம் (ஸ்ரான்லி) மத்திய மகாவித்தியாலயத்தில் பணியாற்றினார். இவர் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம் நடத்திய இசை விழாக்களிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் நடத்திய நல்லூர் முருகன் தெய்வீக இசை அரங்குகளிலும் பங்காற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 123