ஆளுமை:சண்முகநாதபிள்ளை, கணபதிப்பிள்ளை

From நூலகம்
Name சண்முகநாதபிள்ளை
Pages கணபதிப்பிள்ளை
Birth 1936.03.02
Place நயினாதீவு
Category கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகநாதபிள்ளை, கணபதிப்பிள்ளை (1936.03.02 - ) நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞன். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார். இலங்கையில் வெளிவரும் தமிழ் நாளிதழ்கள், வார இதழ்களில் பலநூறு கவிதைகளையும் ஆன்மீகம், ஆய்வு எனப் பலதுறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவர் தனது சொந்தப் பெயரிலும் நயினைநாதன், ஷண்.முருகனடியான் என்னும் புனைபெயர்களிலும் தனது ஆக்கங்களை வெளிப்படுத்தி உள்ளார். இவர் மரபுவழிக் கவிதைகளைப் படைத்தார்.. நயினாதீவு நாகபூஷணி அம்மன் மேல் அளவில்லாப் பற்றுடன் வாழ்ந்த இவர் புராதனி நயினை நாகபூசணி நூலை எழுதியுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் அரச நிறுவனத்தின் தமிழ் இலக்கிய மாமன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட இவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் மன்றம், உலக ஆசிரியர் தினம், நில அளவைத் திணைக்களம் ஆகியவை ஒழுங்கு செய்த கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கு கொண்டு பரிசில்களைப் பெற்றுள்ளார். நயினை மணிபல்லவக் கலாமன்றம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி 1972 ஆம் ஆண்டு இவருக்குப் பொன்னடை போர்த்திக் கௌரவித்தது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 21


வெளி இணைப்புக்கள்