ஆளுமை:சந்தியா, செபஸ்டி

From நூலகம்
Name சந்தியா
Pages செபஸ்டி
Pages -
Birth 1951.01.07
Place இரணைமாதாநகர்
Category கூத்துக்கலைஞர்,அண்ணாவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்தியா,செபஸ்டி (1951.01.07 - ) கிளிநொச்சி, இரணைமாதாநகரினை பிறப்பிடமாகக் கொண்ட கூத்துக்கலைஞர் . இவரது தந்தை செபஸ்டி. இவர் தனது ஆரம்பக் கல்வியின் இடைநடுவில் நடிக்கத் தொடங்கி தனது 15ம்,16ம் வயதில் காவலூர் செல்வராஜா அவர்களின் நாடகங்களில் நடித்துமுள்ளார். அரிச்சந்திரா நாட்டுக்கூத்து எழுதி கலைஞர்களுக்கு பழகி மக்களின் பாராட்டுகளையும் பெற்று, 1972ஆம் ஆண்டு அண்ணாவி அவர்களுடைய நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட அந்தோனியார் நாடகத்தில் ஜூனியர் பாத்திரம் ஏற்று நடித்தார்.

மருசலீன் அண்ணாவி அவர்கள் பிறப்பிலேயே ஒருகால் வழங்காமல் இருந்தமையால் அவருடைய நாடகங்களில் கலைஞர்களுக்கு கூத்தினை பழக்குவது இவர்தான். அத்துடன் மிருதங்கம், மேக்கப் உடையலங்காரம் என்பன இவருடைய கைவண்ணத்தில் உருவானவை. அண்ணாவியினுடைய நேரடி சீடராக இருந்து அனைத்து நாடகங்களையும் கற்றுக்கொண்டார். 1973, 1974 ஆம் ஆண்டுகளில் தாய் மேல் ஆணை, ஒரு துளி ரத்தம் போன்ற நாடகங்களில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். அதனை நெறியாள்கை செய்வதிலும் இவருடைய பங்கு முதன்மை வகித்தது.

1993-ம் ஆண்டு வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் பாடுகளை கூத்துப் பாணியில் எழுதி மக்களுடைய ஒத்துழைப்புடன் பழக்கியதில் வெற்றியும் கண்ட இவர் தொடர்ந்து மூன்று முறைகள் இவருடைய பாஸ்கா நாடகம் மக்களால் நடித்து மேடையேற்ற பட்டுள்ளமை சிறப்பம்சம் ஆகும். 1989ஆம் ஆண்டு 18 நாடகங்கள் பாசையூர், குருநகர், வலைப்பாடு, ஜெயபுரம், நாச்சிக்குடா, கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து வலைப்பாட்டில் 30 நிமிட போட்டி நாடகமாக நடந்ததென கூறப்பட்டது. அதனை ஒழுங்கு செய்த திருமறைக் கலாமன்ற கலைஞர்களைக் கொண்டு சந்தியா அவர்களின் தலைமையில் நெறியாள்கை செய்யப்பட்ட ஞானசவுந்தரி நாடகம் தடைசெய்யப்பட்டதாகவும் கூறினார்.