ஆளுமை:சந்திரிக்கா, கணேஸ்பரன்

From நூலகம்
Name சந்திரிகா
Pages கணேஸ்பரன்
Pages பரமேஸ்வரி
Birth 1964.11.21
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரிகா, கணேஸ்பரன் (1964.11.21) மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணேஸ்பரன்; தாய் பரமேஸ்வரி. ஆரம்பக் கல்வியை யாழ் மானிப்பாய் விவேகானந்தா வித்தியாசாலையிலும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியை மானிப்பாய் மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் இசைக்கலைமணி பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் வட இலங்கை சங்கீத சபையின் பண்ணிசைக் கலாவித்தகர், சங்கீத கலாவித்தகர் பட்டம் ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார். சைவபரிபாலன சபையினர் நடத்திய பண்ணிசைப் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பகுதிநேர பண்ணிசை விரிவுரையாளராக 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரை கடமையாற்றிய இவர் தற்பொழுது இசை ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார். இவரின் இசை குரு ஓதுவார் மூர்த்தி வி.ரி.வி.சுப்பிரமணியம் ஆவார்.”பண்ணிசைத் தேன் துளிகள்” என்னும் நூலை வட இலங்கை சங்கீத சபையின் பாடத்திட்டத்தை உள்ளடக்கி 2004 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். இப் பாடத்திட்டத்திற்கு இணைவாக வட இலங்கை சங்கீத சபையின் பாடத்திட்டத்தின் செயன்முறையை அடிப்படையாகக் கொண்ட இறுவட்டொன்றையும் வெளியிட்டுள்ளதுடன் கல்வித் திட்டத்தில் 6, 7ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட செயன்முறை இறுவட்டொன்றையும் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரம் 10, 11, 12, 13ஆம் ஆண்டு மாணவர்களுக்கான செயன்முறை இறுவட்டிலும் இவர் பாடியுள்ளார். ”சிறகடிக்கும் சிறார்கள்” என்னும் சிறுவர் பாடல் இறுவட்டொன்றை வெளியிட்டுள்ளார். இந்து சமய கலாசார அலுவலக திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பண்ணிசை இறுவட்டிலும் பாடியுள்ளார். தற்பொழுது இவர் வடஇலங்கை சங்கீத சபையின் ஒவ்வொரு தரத்திற்குமான பண்ணிசைப் பாடத்திட்டத்திற்கான பாடத்திட்டத்தை தயாரித்து வருகிறார். மானிப்பாய் மகளிர் கல்லூரியிலும் மானிப்பாய் புனித அன்னம்மாள் பாடசாலையிலும் இடம்பெற்ற தமிழ்த் தினப்போட்டிகளில் 9 முறை தேசியமட்டத்தில் குழு இசை , தனிஇசை பாவோதல் ஆகியவற்றில் இவர் பழக்கிய மாணவர்கள் முதலாவதாக வந்துள்ளார்கள். தற்பொழுது மானிப்பாய் இந்துசமய விருத்திச்சங்கத்தினதும் துர்க்கை அம்மன் கோவில் அறநெறி வகுப்புகளிலும் பண்ணிசை கற்பிக்கின்றார். அத்துடன் சத்தியசாயி பாடசாலையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இசை வகுப்புகள் நடத்துகின்றார். வடமாகாண சபையினால் நடாத்தப்படும் இசைப்பயிற்சிக்கருத்தரங்குகளிலும் பட்டதாரிஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளிலும் வளவாளராகக் கலந்துகொள்கி்ன்றார். சாவகச்சேரியில்ஆசிரியர்களுக்காக பண்ணிசை வகுப்புகள் நடாத்துகின்றார்.

விருதுகள்


ஜனாதிபதியினால் வழங்கப்படும் பிரதீபாபிரபா விருது 2011ஆம் ஆண்டு. வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் குருபிரதீபா பிரபா விருது 2018ஆம் ஆண்டு. வலிகாம கல்வி வலயத்தினால் சிறந்த ஆசியருக்கான சேவை பாராட்டு விருதுகள் பிரதேச சபையினால் கலைஞாயிறு விருது. வடமாகாணத்தால் பண்ணிசை ஒலிப்பதிவுக்காக பதக்கம்

குறிப்பு : மேற்படி பதிவு சந்திரிகா, கணேஸ்பரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 59