ஆளுமை:சப்னா, ஜெய்னுல் ஆப்தீன்

From நூலகம்
Name சப்னா
Pages ஜெய்னுல் ஆப்தீன்
Pages நஸீமா
Birth
Place இறக்குவானை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சப்னா, ஜெய்னுல் ஆப்தீன் இறக்குவானையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஜெய்னுல் ஆப்தீன்; தாய் நஸீமா. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் இளமாணிப் பட்டப்படிப்பினை முடித்துள்ளார். தேசிய அபிவிருத்தி நிறுவனத்தில் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறியையும் கற்றுள்ளார்.

பாடல்,கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுதல் பன்முகத் திறமைகளைக் கொண்ட எழுத்தாளர். இவரின் ஆக்கங்கள் சஞ்சிகைகளிலும் நாளிதழ்களிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் வெளியாகியுள்ளன. அத்துடன் பல குழுமங்களிலும் கவிதைகள் எழுதி வருகிறார்.

கவிதை, பாடல் ஆக்கம், சிறுகதை போட்டிகளிலும கலந்து கொண்டு முதல் இடம்பெற்றுள்ளார். இவரது முதல் நூலான மாயாவின் பேனா எனும் கவிதை தொகுப்பு 2018ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாவது நூலான சமுத்ராவும் அவளிசைக்கும் புல்லாங்குழலும் நூல் கொடகே நிறுவனத்தினால் 2018ஆம் ஆண்டு சிறந்த கையெழுத்துப் பிரதிக்கான பரிசை வென்றது. இவரின் இரண்டாவது நூல் கொடகே நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

கவினெழி விருது – தடாகம் கலை இலக்கிய வட்டம். கவிதீபம் விருது - தடாகம் கலை இலக்கிய வட்டம். கவிச்சிற்பி – கவியுலகப் பூஞ்சொலை, இந்தியா. கவிவேந்தர் – கவியுலகப் பூஞ்சோலை, இந்தியா. ஈழத்துக்குயில் – அமுதசுரபி அறக்கட்டளை, இந்தியா.