ஆளுமை:சியாமளாங்கி, கருணாகரன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:36, 29 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சியாமளாங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சியாமளாங்கி
தந்தை கருணாகரன்
பிறப்பு 1978.09.02
ஊர்
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சியாமளாங்கி, கருணாகரன் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்த இசைக் கலைஞர். இவரின் தந்தை பிரபல இசைக் கலைஞர் கருணாகரன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப தொடக்கம் உயர் கல்வி வரை யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கற்றார். இசை துறைசார் இளங்கலைமாணி பட்டம் முதுகலைமாணி பட்டத்தையும் சென்னை பல்கலைக்கழகத்திலும், முதுதத்துவமாணிப் பட்டத்தை தமிழ்நாடு அன்னை திரேசா மகளிர் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். கலாநிதி பட்டத்தை தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். கிழக்கு விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளராக உள்ள இவர் கட்புல தொழில்நுட்ப கலைத்துறைக்கு துறைத் தலைவராகவும் உள்ளார். இலங்கை உட்பட பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். மாநாடுகளில் இசை தொடர்பான கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.


விருதுகள்

சங்கீதவித்துவான்

குறிப்பு : மேற்படி பதிவு சியாமளாங்கி, கருணாகரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.