ஆளுமை:சிவப்பிரகாசம், மயில்வாகனம் (

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:58, 11 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவப்பிரகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவப்பிரகாசம்
தந்தை மயில்வாகனம்
பிறப்பு 1943.12.27
ஊர் முல்லைத்தீவு, முள்ளியவளை 1ஆம் வட்டாரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவப்பிரகாசம், மயில்வாகனம் (1943.12.27) முல்லைத்தீவு முள்ளியவளை, 1ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை மயில்வாகனம். அண்ணாவியார் நாகமணி என்பவரின் பேரனாகிய சிவப்பிரகாசம் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். கலையில் ஆர்வம் சிறுவயது முதலே இருந்தமையினால் மிருதங்கம் வாசிப்பதை கேள்விஞானம் மூலமே கற்றார். தன்னுடைய 15ஆவது வயதில் சகோதரியும் இசை ஆசிரியருமான மயில்வாகனம் தங்கச்சி என்பவருடைய இசைக்கச்சேரி கல்யாணவேலவர் ஆலயத்தில் நடந்தபோது முதன்முதலாக பக்கவாத்தியம் வாசித்தார். இவரின் சகோதரியின் பல கச்சேரிகளுக்கு இவரே பக்கவாவாத்தியம் வாசித்துள்ளார்.

முல்லைச் சகோதரிகளின் இசைக்கச்சேரிகளுக்கும் இவர் பல வருடங்களாக மிருதங்கம் வாசித்துள்ளார். யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரிடம் முறையாக மிருதங்கம் கற்றார். தொடர்ந்து பொ.பாலசுப்பிரமணியம் அவர்களிடம் மிருதங்கத்தை கற்றார்.