ஆளுமை:சீவரெத்தினம் உபாத்தியார், சுந்தரம்

From நூலகம்
Name சீவரெத்தினம் உபாத்தியார்
Pages சுந்தரம்
Pages சிவகொழுந்து அம்மையார்
Birth 1918.09.05
Place வேலணை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சீவரெத்தினம் உபாத்தியார், சுந்தரம் (1918.09.05 - ) வேலணையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சுந்தரம்; தாய் தாவடி ஆச்சி என்றழைக்கப்பட்ட சிவக்கொழுந்து அம்மையார்.

இவர் முதலில் புங்குடுதீவு கணேஷ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணி புரிந்தார். தொடர்ந்து நாரந்தனை, சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலையிலும் ஈற்றில் தனது சொந்த ஊரான வேலணையில் சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சமூகத் தொண்டராகவும், கிராம சபை உறுப்பினராகவும், வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நெறியாளருள் ஒருவராகவும் பணியாற்றினார். கொடிய யுத்தம் நடந்த வேளையில் தன் தாய் மண்ணை விட்டு கனடாவில் தனது புகழிடத்தை அமைத்துகொண்டார். இவர் அங்கும் வடகிப்ளிங் என்ற இடத்தில் இலங்கைத் தமிழர் முதியோர் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாகவுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கனடா வாழ் வேலணை மத்திய மகா வித்தியாலய பழைய மாணவ சங்கத்தினரால் தீவக ரத்தினம் என மகுடம் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 333-335