ஆளுமை:சுந்தரேஸ்வரி, ஜெயக்குமாரன்

From நூலகம்
Name சுந்தரேஸ்வரி, ஜெயக்குமாரன்
Pages முருகேசு
Birth 1949.06.19
Place நயினாதீவு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரேஸ்வரி, ஜெயக்குமாரன் (1949.06.19 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வீணை இசைக் கலைஞர். இவரது தந்தை முருகேசு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசையைப் பயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற இவர், யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பலமுறை வீணைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தனது இசைக் கச்சேரியை ஈழத்தின் பல பாகங்களிலும் நிகழ்த்தியுள்ளார். இராமநாதன் நுண்கலைப்பீடம் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் முயற்சியில் மற்றவர்களோடு இணைந்து செயற்பட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் வீணை இசை வகுப்புக்களை நடாத்தி வரும் இவரது கலைப்பணியைப் பாராட்டி 2002 ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை கலைஞானச்சுடர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 114
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 66