ஆளுமை:செல்லம்மா கனகசுந்தரம்

From நூலகம்
Name செல்லம்மா
Pages சுப்பிரமணியம்
Pages தெய்வானை
Birth 1933.05.21
Pages 08.11.2011
Place குரும்பசிட்டி
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லம்மா கனகசுந்தரம் (1933.05.21) யாழ்ப்பாணம் குரும்பசிட்டியில் பிறந்த ஆசிரியராவர். தனது ஆரம்பக் கல்வியை குரும்பசிட்டி பொன் பரமானந்தர் பாடசாலையில் கற்றார். பின்னர் எட்டாம் வகுப்பு முதல் சாதாரணதரம் வரை மயிலிட்டி தெற்கு ஞானோதயா வித்தியாசாலையிலும் கற்றுக்கொண்டார். சாதாரணதரம் வரையான ஆங்கிலமொழிக் கல்வியை வசாவிளான் மகாவித்தியாலயத்திற் சேர்ந்து படித்துத் தேர்ச்சிபெற்றார்.

1951ஆம் ஆண்டு மாத்தறையிலுள்ள முஸ்லீம் பாடசாலையொன்றில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரியத்தொடங்கினார். 1952 ம் ஆண்டு கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து இருவருடகால தமிழாசிரியப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டபின், தனது கணவர் கல்வி கற்பித்துக்கொண்டிருந்த கேகாலை-அம்பே என்ற ஊரின் முஸ்லீம் பாடசாலையில் ஆசிரியப்பணியைத் தொடர்ந்தார். 1957-1958 ஆகிய இரண்டு வருடங்களும் இரத்தினபுரியில் தமிழ்ப் பாடசாலையொன்றில் கற்பித்து, பின்னர் சிறிதுகாலம் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும் 1959 ஜனவரி முதல் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்திலும் ஆசிரியப்பணியை மேற்கொண்டிருந்தார். தமிழ்மொழிப் புலமையும் ஆங்கிலமொழிக் கல்வியறிவும் ஒருங்கே சேரப்பெற்றவர்.01.01.1970ஆம் ஆண்டு தொடக்கம் 31.12.1990 ம் ஆண்டு வரையான இருபது வருட காலங்களாக, தனது சொந்த ஊரான குரும்பசிட்டியில் பொன் பரமானந்தர் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியில் ஓய்வுபெறும் காலம்வரை, ஈடுபட்டவர்1994 ஆம் வருடம் இவர் தன் கணவருடன் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா-சிட்னி சென்று ஈஸ்ற்வூட், நோர்த் பரமற்றா நகரங்களில் வாழ்ந்துவந்தார். தன் இறுதிக்காலங்களிற்கூட அப்பகுதியிலுள்ள இந்துசமூக வீட்டுத்திட்டங்களின் நிர்வாகங்களுக்கான சமூகசேவகியாகத் தொண்டாற்றினார். அவர் கடும் சுகவீனம் காரணமாகவும் மூப்படைந்த நிலையிலும் 08.11.2011 அன்று காலமாகினார்!!.


வெளி இணைப்புக்கள்