ஆளுமை:ஞானப்பிரகாசர், சுவாமிநாதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானப்பிரகாசர், சாமிநாதப்பிள்ளை
தந்தை சாமிநாதப்பிள்ளை
தாய் தங்கமுத்து
பிறப்பு 1875
இறப்பு 1947
ஊர் மானிப்பாய்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்தியலிங்கம் என இயற்பெயரைக் கொண்ட சா. ஞானப்பிரகாசர் (1875 - 1947) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சாமிநாதப்பிள்ளை; தாய் தங்கமுத்து. பாடசாலை கல்வி முடிவுற்றதும் அரசாங்க புகை வண்டித் திணைக்களத்தில் இவருக்கு உத்தியோகம் கிடைத்தது. பின்னர் 1901ஆம் ஆண்டு இவர் கிறிஸ்தவ போதகராகி வண சுவாமி ஞானப்பிரகாசர் எனப் பெயர் சூட்டப்பெற்றார்.

ஏறக்குறைய இருபது மொழிகளை நன்கு பயின்று கொண்ட இவர் இயற்றிய தமிழ் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி வரலாற்றிலே மறக்கமுடியாத நிகழ்வாகும். ஆண்டவர் சரித்திரம், கத்தோலிக்க திருச்சபையும் அதன் போதகங்களும், கிறிஸ்துநாதர் சரித்திர ஆராய்ச்சி, தமிழ் அமைப்புற்ற வரலாறு, தருக்க சாத்திர சுருக்கம், தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும், திருச்சபைச் சரித்திரம், துறவி ஞானம், தேவ ஆராதனை முறை, போர்த்துகீசர் ஒல்லாந்தர் கால யாழ்ப்பாண சரிதை, யாழ்ப்பாண சரித்திர ஆராய்ச்சி போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 145-146
  • நூலக எண்: 209 பக்கங்கள் 68-69
  • நூலக எண்: 350 பக்கங்கள் 114-121
  • நூலக எண்: 789 பக்கங்கள் 05-10
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 152-181


வெளி இணைப்புக்கள்