ஆளுமை:தங்கராசா, ஆ

From நூலகம்
Name தங்கராசா
Pages ஆறுமுகம்
Pages மாரிமுத்து
Birth 1941.12.13
Place மட்டக்களப்பு ஆரையம்பதி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கராசா, ஆ (1941.12.13) மட்டக்களப்பு ஆரையம்பதியில் பிறந்த அளுமை. இவரது தந்தை ஆறுமுகம். தாய் மாரிமுத்து. நுவரெலியா பூண்டுலோயா தோட்டப் பாடசாலையில் ஆசிரியராகக் கடமை ஆற்றினார். 1968ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் நடத்துனராக கடமையாற்றினார்.

1962ஆம் ஆண்டு எழுத்துத் துறைக்குள் பிரவேசித்தார். 1962ஆம் ஆண்டு ஆரையம்பதி பரமன் சனசமூக நிலையத்தின் தலைவராக இருந்த பொழுது செங்காந்தள் என்ற கையெழுத்து பிரதி இலக்கிய ஏட்டை பிரசுரித்துள்ளார்கள். இம் மலர் தொடர்ந்து ஐந்தாண்டுகளில் மூன்று மலர்கள் வெளிவந்துள்ளன. இந்த மலரே மலையக பெண் எழுத்தாளர் பூரணியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

1962ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து வெளிவந்த தேசியமுரசு பத்திரிகையில் தங்கராசா அவர்களின் முதலாவது சிறுகதை வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திராவிடன் எனும் தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த பத்திரிகையில் கழகத்தை வெல்லச் செய்வீர் என்ற தலைப்பில் கவிதை வெளிவந்தது. தொடர்ந்து இலங்கை இந்திய ஏடுகளிலும் இலங்கை வானொலியிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்தன. குறிப்பாக கல்கி, குறிஞ்சி மலர், குமுதம், ஆனந்தவிகடன், ராணி ஆகிய சஞ்சிகைகளிலும், சுதந்திரன் ஆகியவற்றிலும் வெளிவந்துள்ளன. ஏறக்குறைய கதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்துள்ளன. இலக்கிய ஏடான சுடரில் பத்துக்கும் மேற்பட்ட கதைகளும், தினகரன், வீரகேசரி, ஜோதி, தினமதி, மித்திரன், சிந்தாமணி, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் கதைகள், கவிதைகளும் வெளிவந்துள்ளன. மரகதம், கதம்பம், பாடும்மீன், தமிழ் இன்பம், புதினம் ஆகிய ஏடுகளிலும் இவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், வானொலி கதைகள் என இவர் எழுதியுள்ளார். பல மேடை நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

விருதுகள்

தமிழருவி

Resources

  • நூலக எண்: 14784 பக்கங்கள் 3-7, 8-15