ஆளுமை:தனுஜா, பங்கஜன்

From நூலகம்
Name தனுஜா
Pages பங்கஜன்
Pages கவிதா
Birth 1998.03.27
Place கிளிநொச்சி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனுஜா, பங்கஜன் (1998.03.27) கிளிநொச்சி, விஸ்வமடுவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை பங்கஜன்; தாய் கவிதா. விசுமடு அபிக்குட்டி, முல்லைக்கவி தனுஜா என்னும் புனைபெயரில் எழுதி வருகிறார். ஆரம்பக்கல்வியை முல்லைத்தீவு விசுமடு மகாவித்தியாலயத்தில் கற்றார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இடைநிலைக்கல்வியை யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்க மத்தியக்கல்லூரியிலும் முல்லைத்தீவு விசுவமடு மத்தியக்கல்லூரியிலும், உயர்தரத்தை கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியிலும் கற்றார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்தும் அங்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கிறார் எழுத்தாளர். 2011ஆம் ஆண்டில் இருந்து எழுத்துத்துறை சார்ந்த ஆர்வம் கொண்ட எழுத்தாளர். யுத்த வலிகளே எழுத்துத்துறைக்கு பிரவேசிக்கக் காரணமெனத் தெரிவிக்கின்றார். கவிதை, விமர்சனம், கதை, நாடகப்பிரதி எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர். மிகவும் இளம் வயதுடைய தனுஜா பலரது நூல்களுக்கு விமர்சனம் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் உதயன் நாளிதழ், கலையரசி சஞ்சிகை ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. பாடசாலைக் காலத்தில் விளையாட்டுத்துறையிலும் மிகவும் ஈடுபாடு உள்ள இவர் மாகாண மட்டத்தில் 100, 200, 400 மீட்ட ஓட்ட பந்தயத்தில் சாதனை படைத்துள்ளார். தற்பொழுது மக்கள் வங்கியில் பயிலுனராகக் கடமைபுரியும் எழுத்தாளர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனக் கடிதத்திற்காக காத்திருக்கிறார். ஒரு பூவின் மடல் என்னும் கவிதை நூலை 2015ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு தனுஜா, பங்கஜன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.