ஆளுமை:தேவப்பிரியா, கோபிநாத்

From நூலகம்
Name தேவிப்பிரயா
Birth 1987.09.10
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவப்பிரியா, கோபிநாத் (1987.09.10) யாழ்பாணம், ஈச்சைமோட்டையில் பிறந்த எழுத்தாளர். கிளிநொச்சி கட்டைக்காடு பெரியகுளத்தை வதிவிடமாகக் கொண்டவர். ஆரம்ப, இடைநிலை கல்வியை யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியிலும் உயர் கல்வியை கிளிநொச்சி மத்தியக் கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தில் பரதத்தை பட்டப்படிப்பிற்குரிய பாடமாகக் கொண்டு இளம் நுண்கலைமாணி பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார். பரதக்கலையைப் பழக்குவதுடன் கட்டைக்காடு கலை ஒளி மன்றத்தின் உறுப்பினராகவும் இருந்து வருவதுடன் இம்மன்றத்தின் ஊடாக கலை நிகழ்வுகளை கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் நிகழ்த்தி வருகிறார். 2015ஆம் ஆண்டின் அரச நடன விழாவில் கிளிநொச்சி மாவட்ட ரீதியாக இரு நடன அளிக்கைகளை கலை ஒளி கலாமன்றம் ஊடாக நெறியாள்கை செய்து முதலாம், இரண்டாம் இடங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் 2017ஆம் ஆண்டு வழங்கிய இளம் கலைஞருக்கான விருது.

Resources

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 59-60