ஆளுமை:நடராசா, இளையதம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:30, 11 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நடராசா, இளை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசா, இளையதம்பி
தந்தை இளையதம்பி
தாய் பார்வதி
பிறப்பு 1939.02.11
ஊர் திருநகர், கிளிநொச்சி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இ. நடராசா (1939.02.11 - ) கிளிநொச்சி, திருநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் பார்வதி. இவர் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். இவரது முதல் படைப்பு 1968ஆம் ஆண்டு வாடா மல்லிகை எனும் தலைப்பில் தினபதிப் பத்திரிகையில் பிரசுரமானது. பின்னர் 1968ஆம் ஆண்டின் பின் பூண்டுலோயாவிலிருந்து வெளிவந்த வெற்றிமணி, சஞ்சிகையில் பசுவும் கயிறும், முதலாளியும் தொழிலாளியும், இதயக் கோவிலும் இறைவழிபாடுகளும், தாயும் சேய்களும், திருவள்ளுவரும் திருக்குறளும் ஆகிய தலைப்புக்களிலான தத்துவக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவர் இதுவரைக்கும் 75க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளதோடு 30 சிறுகதைகளைத் தொகுத்து மண்ணின் வேர்கள் எனும் தலைப்பில் 2006ஆம் ஆண்டு வெளியிட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 157-159