"ஆளுமை:நயிமா, முஹம்மத் சித்திக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 31: வரிசை 31:
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:55, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் நயிமா, முஹம்மத் சித்திக்
தந்தை பகீர் மரைக்கார்
தாய் தாஜ் பீவி
பிறப்பு 1948
ஊர் அப்புத்தளை
வகை எழுத்தாளர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நயிமா, முஹம்மத் சித்திக் (1948 - ) பதுளை, அப்புத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை பகீர் மரைக்கார்; தாய் தாஜ் பீவி. இவர் பசறை மத்தியக் கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் கற்றுத் தொடர்ந்து கலைமாணிப்பட்டத்தையும் கல்வி டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

இவர் மலையகப் பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தனது எழுத்துக்களை நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், பாட நூல்கள் எழுதியுள்ளார். இவர் வாழ்க்கைப் பயணங்கள், வாழ்க்கைச் சுவடுகள், வாழ்க்கை வர்ணங்கள் ஆகிய நூல்களைப் படைத்ததுடன் வானொலி, பத்திரிகைத் துறையிலும் பணியாற்றியுள்ளார். இவரது இலக்கியச் சேவையைப் பாராட்டி மலையக இலக்கியப் பேரவை இவரைக் கௌரவித்ததோடு, இலங்கை அரசினால் இவருக்குக் கலாபூஷணம் விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது. இவர் இல்லற வாழ்க்கையில் இணைய முன்பு 'நயீமா ஏ. பஷீர்' என்ற பெயரில் எழுதியதுடன் பின்பு 'நயீமா சித்தீக்' என தனது பெயரை மாற்றிக் கொண்டார். இவர் இலக்கியத் தாரகை, சிறுகதைச் செம்மணி போன்ற பட்டங்களைப் பெற்றவர்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 532
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 198-201
  • நூலக எண்: 13949 பக்கங்கள் 04-07
  • நூலக எண்: 1673 பக்கங்கள் 17-20