ஆளுமை:நாகபூசணி, கருப்பையா

From நூலகம்
Name நாகபூசணி
Pages கருப்பையா தேசிகர்
Pages காளியம்மாள்
Birth 1966.11.11
Pages -
Place கம்பளை
Category ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகபூசணி கருப்பையா (1966.11.11) கண்டி, கம்பளையில் பிறந்த ஊடகவியலாளர். இவரது தந்தை கருப்பையா தேசிகர்; தாய் காளியம்மாள். இவர் தற்பொழுது இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக கடமையாற்றி வருகிறார். தனது 18ஆவது வயதில் எழுத்துத்துறைக்கு பிரவேசித்தார். நாவலப்பிட்டி கதிரேஷன் கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கமைாணி பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்றுள்ளார். இவர் அறிவிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர்.செய்தி வாசிப்பாளர். விரிவுரையாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். "நெற்றிக்கண்" கவிதை நூலின் நூலாசிரியருமாவார்.

இவரின் ஊடகத்துறையை ஆளுமைக்காக சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது, மத்திய மாகாணசபை சாகித்திய விருது, கிருஷ்ண கலாலய விருது போன்றன விருதுகளை பெற்றுள்ளார். அத்தோடு மலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிவிப்பாளர் சிறந்த செய்திவாசிப்பாளர் என்ற இரட்டை அரச வானொலி விருதுகளையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : மேற்படி பதிவு நாகபூசணி கருப்பையா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

வெளி இணைப்புக்கள்