ஆளுமை:நிஷா, ஹஸன்

From நூலகம்
Name நிஷா
Pages எம்.எம்.பிச்சை
Pages சக்கீனா பீபி
Birth
Place கொழும்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நிஷா, ஹஸன் கொழும்பில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை எம்.எம். பிச்சை; தாய் சக்கீனா பீபி. கொழும்பு விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். 1987ஆம் ஆண்டு வானொலியின் சிறுவர் மலர் நிகழ்ச்சியின் ஊடாக எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றிருந்தாலும் சிறுகதை எழுதும் அளவுக்கு ஆற்றல் கொண்டவராவார். வாசிப்பதனால் மனிதன் பூரணமடைவான் என்பது இவரின் ஆக்கத்திறமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். கட்டுரை, சிறுகதை எழுதும் திறமை கொண்டவர். இவரின் ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, வீரகேசரி, தினமுரசு, மித்திரன் போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. நிஷா ஹஸன் 2008 மார்ச் மாதம் ரயிலுக்கு நேரமாச்சு என்ற தனது முதலாவது சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.


படைப்புகள்

  • ரயிலுக்கு நேரமாச்சு (சிறுகதைத் தொகுதி)