ஆளுமை:நூருல் அயின்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நூருல் அயின்
தந்தை மர்ஹும் அல்ஹாஜ் எம்.எம். ரஷீத்.
தாய் உம்மு ஸல்மா
பிறப்பு 1955.05.22
ஊர் உடுதெனிய
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நூருல் அயின் (1955.05.22 - ) மலையகம், உடுதெனியவைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை மர்ஹும் அல்ஹாஜ் எம்.எம். ரஷீத்.; இவரது தாய் உம்மு ஸல்மா. இவர் உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயம், மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றதோடு, கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பொதுசனத் தொடர்பு துறை சான்றிதழும், தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசன துறை டிப்ளோமா பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார். கணினித் துறையில் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் பிரதி தயாரிப்பாளராக பல ஆண்டு காலமாக எழுதி வந்த இவர் வானொலி சிறப்புக் கவியரங்கங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கு பற்றி வருகிறார்.

1980 லிருந்து 1990 வரை 'தினபதி - சிந்தாமணி' ஆசிரியர் பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 'ஜனனி' என்ற ஜனரஞ்சக பத்திரிகையிலும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் 'திங்கள்' என்ற மாதாந்த சஞ்சிகையிலும் இணை ஆசிரியராகவும் திகழ்ந்தார். திணைக்களத்தின் 'தெசதிய' என்ற சிங்கள சஞ்சிகையின் சிறப்புக் கட்டுரை எழுத்தாளராகவும் திகழ்ந்து சிங்களத்திலும் இலக்கியம் படைக்கிறார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக (District Information Officer)பணிபுரிந்த இவர் 'கொழம்ப புவத்' (கொழும்புச் செய்திகள்) என்ற பெயரிலான சிங்கள மொழி மூல காலாண்டு பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றி 'பண் பாடும் பெண்' என்ற நூலின் ஆசிரியர் இவர்,

அகில இலங்கை சமாதான நீதவானாகவும் ,கொழும்பு உயர் நீதிமன்ற ஜூரர் சபை உறுப்பினராகவும் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அரச மொழிப்பெயர்ப்பாளராகவும் பத்திரிகைத்துறையில் வெள்ளி விழாவை கடந்திருக்கும் இவர், இலங்கையில் ஊடகத்துறையில் முஸ்லிம் பெண் ஊடக அதிகாரியாக மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக பணியாற்றிய ஒரேயொரு முஸ்லிம் பெண் அதிகாரி என்ற பெருமைக்குரியவர். பல்வேறு ஆளுமைகளை கொண்டவர்



வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 84-87
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நூருல்_அயின்&oldid=453736" இருந்து மீள்விக்கப்பட்டது