ஆளுமை:பத்மநாப ஐயர், இரத்தின ஐயர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்மநாப ஐயர்
தந்தை இரத்தின ஐயர்
தாய் யோகாம்பாள்
பிறப்பு 1941.08.24
ஊர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை
வகை இலக்கியச் செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மநாப ஐயர், இரத்தின ஐயர் (1941.08.24 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த இலக்கியச் செயற்பாட்டாளர். இவரது தந்தை இரத்தின ஐயர்; தாய் யோகாம்பாள். இவர் ஈழத்து இலக்கியம் என அறியப்படும் யாவற்றிற்கும் ஏதோ ஒரு வகையில் உதவி புரிந்துள்ளார். இவரது முயற்சியால் பல ஈழத்து நூல்கள் தமிழகத்தில் வெளிவந்துள்ளன. இவர் 60களில் மலேசிய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்கள் அடங்கிய 'அக்கரை இலக்கியம்', 80களில் 'பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்' என்ற தொகுப்பு, தொடர்ந்து 'மரணத்துள் வாழ்வோம்' என்ற கவிதைத் தொகுப்பு, தேடலும் படைப்புலகமும் என்ற ஓவியர் மாற்கு பற்றிய ஆய்வு நூல் ஆகியன வெளிவருவதற்கு முன்னின்று உழைத்துள்ளார்.

இவர் 1990 இல் புலம்பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்ததுடன் தமிழர் நலன்புரிச் சங்கம் ஊடாக '1995 ஆம் ஆண்டு அறிக்கையும் 10 ஆவது ஆண்டு நிறைவுச் சிறப்பு மலரும்' என்னும் தொகுப்பை 1996 இலும் வெளியிட்டார். மேலும் இவர் 1997 இல் 'கிழக்கும் மேற்கும்' 1998 இல் 'இன்னுமொரு காலடி' 1999 இல் 'யுகம் மாறும்' 2001 இல் 'கண்ணில் தெரியுது வானம்' ஆகிய ஐந்து தொகுப்புகளை உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் முன்வைத்துள்ளார்.

இவர் 2004 ஆம் ஆண்டு கனடாவில் இருக்கும் இலக்கிய அமைப்பினால் வழங்கப்படும் இயல் விருதைப் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 394 பக்கங்கள் 12
  • நூலக எண்: 14682 பக்கங்கள் 99-115