ஆளுமை:பாலகப்போடி, சி

From நூலகம்
Name பாலகப்போடி
Pages சின்னவிப்போடி
Pages மாரிமுத்து
Birth 1944.11.15
Pages 2011.01.22
Place மட்டக்களப்பு படுவான்கரை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலகப்போடி, சி (11944.11.15) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் பிறந்த அளுமை. இவரது தந்தை சின்னவிப்போடி. தாய் மாரிமுத்து. கூத்து கலையின் மீது சிறு வயது முதலே ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த கூத்து ஏடுகளை எழுதிக் கொடுக்கின்ற கணபதிப்பிள்ளை வைத்தியருடன் இணைந்து அவர் பாடி எழுதுகின்ற போது பாலகப்போடி அண்ணாவியார் அவற்றை அவதானித்து கேட்டு கொண்டிருப்பார். இவர் சிறு வயதில் இருந்தே மத்தளம் அடிப்பதைப் பழகிக் கொண்டார். பாலகப்போடி அண்ணாவியார் நாகமணிப்போடி அண்ணாவியாரை தனது குருவாகக் கொண்டு வடமோடி தென்மோடிக் கூத்துப் பாடல்கள், ஆட்ட நுணுக்கங்கள், தாளக்கட்டுக்கள் போன்றவற்றை கற்றுக்கொண்டு தனது திறமையை வளர்த்துக்கொண்டார். 1965ஆம் ஆண்டு முழுமையான அண்ணாவியராக திகழ்ந்தார்.

வடமோடிக் கூத்தான 17ஆம் 18ஆம் போர்க் கூத்தில் விஜயகர்ணன் பாத்திரம் ஏற்று ஆடினார். தென்மோடிக்கூத்தான சாம்பேந்திரன் நாடகத்தில் பிராமணன் பாத்திரம் ஏற்று ஆடினார். மேலும் பாலகப்போடி அண்ணாவியார் எட்டு வடமோடிக்கூத்துக்களும் பத்து தென்மோடிக் கூத்துக்களும் பழக்கி அங்கேற்றியுள்ளார். இவர் பழந்தமிழ் புராண இதிகாச நாடகங்களையும் எழுதி நடித்துள்ளார்.

விருதுகள்

கலாவித்தகர் விருது – 2000.

கலாபூஷணம் விருது – 2006.

Resources

  • நூலக எண்: 76234 பக்கங்கள் 3-5
  • நூலக எண்: 101818 பக்கங்கள் 14