"ஆளுமை:பாலசிங்கம், கதிரைவேற்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 18: வரிசை 18:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|171-172}}
 
{{வளம்|963|171-172}}
 
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D க. பாலசிங்கம்பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D க. பாலசிங்கம்பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]

00:13, 23 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பாலசிங்கம்
தந்தை கதிரைவேற்பிள்ளை
பிறப்பு 1876.06.23.
இறப்பு 1952.09.04
ஊர் உடுப்பிட்டி
வகை வழக்கறிஞர், வரலாற்றாய்வாளர், சட்டவாக்க பேரவை உறுப்பினர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசிங்கம், கதிரைவேற்பிள்ளை (1876.06.23 - 1952.09.04) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர், வரலாற்றாய்வாளர், எழுத்தாளர். இவரது தந்தை கதிரைவேற்பிள்ளை. இவர் யாழ்ப்பாணக் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றதுடன் பின்னர் சட்டக் கல்வியை முடித்து, கொழும்பில் வழக்கறிஞராகவும் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.

இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு இரண்டாவது தமிழ் உறுப்பினராக 1914 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு 1924 இல் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரானார். இவர் இலங்கையில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, சுதேச மருத்துவமனை, அரசு அடைமான வங்கி போன்ற சேவைகள் ஆரம்பிப்பதற்கு மூல காரணமாக விளங்கியதுடன் நாட்டின் பழைய வரலாற்றாராய்ச்சியிலும் ஈடுபட்டுப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர் நாட்டு மொழிகளின் வாயிலாகவே அரசாட்சியலுவல்களை நடாத்துதல் வேண்டும் என்னும் கருத்தினை 1931 ஆம் ஆண்டு பதிவு செய்தவராவார்.

இலங்கை அரசு 1984.05.22 இல் இவரது படம் பொறித்த முத்திரையை வெளியிட்டுக் கௌரவப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 171-172

வெளி இணைப்புக்கள்