ஆளுமை:பிரேமிளா, பிரதீபன்

From நூலகம்
Name பிரமிளா, பிரதீபன்
Pages செல்வராஜா
Pages சிவகாமி
Birth 1984.03.26
Pages -
Place பதுளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியிலும் கற்றார்.இளங்கலைமானி பட்டத்தை தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும், பட்டப்பின் கற்கைநெறியை தேசிய கல்வி நிறுவத்திலும் கற்றுள்ளார். இவர் ஆசிரியராக தற்பொழுது பணிப்புரிந்து வருகிறார். 2005ஆம் ஆண்டு இவரின் சலனம் எனும் கவிதை தினமுரசு நாளிதழில் முதலில் பிரசுரமானதாக தெரிவிக்கும் எழுத்தாளர், பீலிக்கரை எனும் சிறுகதை ஊடாக ஞானம் சஞ்சிகையின் இளம் எழுத்தாளராக அறிமுகமாகி தனது எழுத்துப் பயணத்தை தொடர்வதாகத் தெரிவிக்கிறார். 2007ஆம் ஆண்டு பீலிக்கரை எனும் சிறுகதைத் தொகுப்பை புரவலர் புத்தகப் பூங்கா ஊடாகவும், 2010ஆம் ஆண்டு பாக்குபட்டை எனும் சிறுகதைத் தொகுப்பை மல்லிகைப் பந்தலினூடாக வெளியீடு செய்துள்ளார். அத்துடன் இவரின் கட்டுபொல் நாவல் கொடகே வெளியீடாக வெளிவந்துள்ளது.

எழுத்தாளர் பிரேமிளா, பிரதீபன் - கொடகே கையெழுத்து போட்டி 2017 கட்டுபொல் நாவல் சிறந்த நாவலுக்கான விருதை பெற்றது, நீயும் நானுமாய் நீண்ட பயணம் எனும் இவரின் கவிதைக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் சிறந்த கவிதைக்கான மகரந்த சிறகு விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படைப்புகள்

  • பீலிக்கரை (சிறுகதைத் தொகுப்பு)
  • பாக்குபட்டை (சிறுகதைத் தொகுப்பு)
  • கட்டுபொல் (நாவல்)