ஆளுமை:மகாலிங்கம், பொன்னம்பலம்

From நூலகம்
Name மகாலிங்கம்
Pages பொன்னம்பலம்
Pages -
Birth 1952
Place கிளிநொச்சி
Category நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாலிங்கம், பொன்னம்பலம் (1952 - ) கிளிநொச்சி, செல்லியாதீவைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை பொன்னம்பலம். இவர் சிறுவயது முதல் தந்தையின் கலைப் பயணத்தில் இணைந்திருந்தார். தந்தையினுடைய காத்தான் கூத்து நாடகத்தில் 12 வயதுச் சிறுவனாக நடித்தார். கிளிநொச்சி மாவட்டம் திக்குவில் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு கூத்து பழக்கி அங்குள்ள பிள்ளையார் கோயிலில் சிவராத்திரி விழாவில் மேடையேற்றிய போது பக்தர்கள் பாராட்டினார்கள்.இவரது கலைப் பணியையும் கலைப்படைப்பின் ஆற்றலையும் பாடல் சிறப்பினையும் கண்ணுற்ற அந்த ஆலயத்தின் பரிபாலனசபை தங்கப் பரிசு வழங்கி கௌரவித்தது.

ஜெயபுரம் வழி பிள்ளையார் கோயில், ,திக்குவில் அய்யனார் கோயில் ,கிராஞ்சி பிள்ளையார் கோயில், ஜெயபுரம் காளி கோவில் போன்ற 5 இடங்களில் இவரது கூத்து மேடை ஏற்றப்பட்டது. அண்ணாவியின் திறமையைப் பாராட்டி நகைபோடும் அக்காலத்து வழமைக்கு ஒப்ப அண்ணாவி மகாலிங்கத்திற்கு மோதிரம் போடப்பட்டது. மட்டுவில்நாடு மேற்கு நெற்நிலவு நடிகர்கள் சிலர் இத்தகவலை கூறினார்கள்.