ஆளுமை:மனோகரன், கோணாமலை

From நூலகம்
Name மனோகரன்
Pages கோணாமலை
Birth 1958
Place 6ம் வட்டாரம், குமுழமுனை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோகரன், கோணாமலை (1958) 6ஆம் வட்டாரம் குமுழமுனை முல்லைத்தீவைச் சேர்ந்த சேர்ந்த கலைஞர். இவரது தந்தை கோணாமலை; தனது பதின்மூன்றாவது வயதில் கலைத்துறைக்குள் பிரவேசித்த இவர் முருகேசு ண்ணாவியாருடன் இணைந்து பாலகாத்தான், கழுக்காத்தான்,பூமாதேவி, சேடிகள், கன்னிகள் ஆகிய பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்.

1996ஆம் ஆண்டு எது பாரம்பரிய நிகழ்வுகளான குடம் ஊதல், கோலாட்டம், காத்தவராயன் போன்ற நிகழ்வுகளை இளைஞர் யுவதிகளுக்குப் பழக்கி பல மாவட்டங்களில் மேடையேற்றியுள்ளார். அண்ணாவியராகவும் நடிகனாகவும் இருக்கிறார். இவரின் சகோதரன் மகேந்திரன் என்பவரும் நாட்டுக்கூத்து அண்ணாவியார் ஆவார்.

2014ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநர் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய கலைகள் போட்டியில் கூத்து (கீழ்பிரிவு) பங்குபற்றியமையைப் பாராட்டி இவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் கரைதுரைப்பற்று பிரதேச கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் இவர் கௌரவிக்கப்பட்டார்.