ஆளுமை:மருதையனார், இராமநாதர்

From நூலகம்
Name மருதையனார்
Pages இராமநாதர்
Birth
Place வேலணை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மருதையனார், இராமநாதர் வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், சிந்தனையாளர், கவிஞர், பேச்சாளர், சமூக- அரசியல்வாதி. இவரது தந்தை இராமநாதர்.

இவரது கட்டுரைகளில் பொருள் பொதிந்த சொற்றொடர்களையும் நவீன சிந்தனைகளின் வெளிப்பாட்டையும் காணலாம். இவர் இந்து சாதனம் பத்திரிகையில் வேலணைத்தீவு கிழவன், பழந்தொழும்பன் என்னும் புனைபெயர்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் அந்நாட்களில் அயல்மதத்தாக்கத்தினால் சைவமும் தமிழும் வலுவிலந்து போற்றுவார் அற்றுப்போயிருந்த நிலையை மாற்ற எண்ணி வேலணைத்தீவு சைவ இளைஞர் சபையைத் தோற்றுவித்து ஈழப் பெரும்புலவர்களை வரவழைத்து மாநாடுகளையும் விழாக்களையும் ஒழுங்கு செய்து எழுச்சி காணச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 1958 ஆம் ஆண்டு ஆசிரிய மணிப்பட்டம் கிடைத்தது.


Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 07-08