ஆளுமை:மலர்விழி, கனகசபை

From நூலகம்
Name மலர்விழி
Pages நாகேந்திரம்
Pages மேனகா
Birth 1962.10.02
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மலர்விழி, கனகசபை (1962.10.02) யாழ்ப்பாணத்தில் பிறந்த கலைஞர். தந்தை நாகேந்திரம்; தாய் மேனகா. ஆரம்பக் கல்வியை யாழ் கட்டுவன் பாலர் ஞானோதயா வித்தியாசாலையிலும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியை யாழ் யூனியன் கல்லூரியிலும் கற்றார். சிறு வயது முதலே வீணை வாசிப்பதிலும் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட மலர்விழி அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தமிழ்த்தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றார். தொடர்ந்து மட்டு சுவாமி விபுலானந்தர இசை நடனக் கல்லூரியில் பட்டம் பெற்று சங்கீத ஆசியராக 1984ஆம் ஆண்டு நியமனம் பெற்றார். 2009ஆம் ஆண்டு 4, 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இறுவட்டு வெளியிட்டுள்ளார். இந்த இறுவட்டிலே 4ஆம் 5ஆம் வகுப்பு மாணவர்களே பாடியுள்ளமை சிறப்பம்சமாகும். 2010ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரணத்தர மாணவர்களுக்காக ஒலிப்பேழை வெளியிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு தீவகக் கல்வி வலயத்தில் பணிபுரிந்தபோது 18 அழகியல் பாட ஆசிரியர்களைப் பயிற்றுவித்து ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்புக் கழக அனுசரணையுடன் நவீன வடமோடிக் கூத்து மலர்விழியினால் பழக்கப்பட்டு ஐந்து வலயங்களில் அரங்கேற்றப்பட்டது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கைநூல் தயாரித்தலில் இசைப்பிரிவிற்கான திட்டமிடல் பகுதியை வடிவமைத்துள்ளார். தற்போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கைநெறியின் இசைப் பகுதி விரிவுரையாளராக கடமையாற்றுகின்றார்.

விருதுகள்

சங்கீத கலாவித்தகர்

எம்ஜிஆர் நினைவு விருதான கலைமாமணி விருது 2017ஆம் ஆண்டு கிடைத்தது.

குறிப்பு : மேற்படி பதிவு மலர்விழி, கனகசபை அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.