ஆளுமை:மும்தாஜ், ஸரூக்

From நூலகம்
Name மும்தாஜ்
Pages மஸ்தான் அப்துல் கபூர்
Pages ஜென்னத்
Birth
Pages 28.03.2018
Place மன்னார்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மும்தாஜ் ஸரூக் மன்னார் மாவட்டத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மஸ்தான் அப்துல் கபூர்; தாய் ஜென்னத். ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை மன்னார் புனித சவேரியர் கன்னியர் மடத்தில் கற்றார். இவர் கொழும்பு பல்கலைக்ழகத்தில் ஊடகத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார். பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டவர் 1989ஆம் ஆண்டு தினபதி பத்திரிகையில் இஸ்லாமிய பூங்காவில் எழுதிய ஆக்கத்தின் ஊடாக இலக்கிய உலகிற்குள் பிரவேசித்தார். இவர் சுதந்திர ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றினார்.

வீரகேசரி பத்திரிகையில் பல தளங்களில் எழுதியுள்ளார். மித்திரன் வாரமலரில் தொடர்ந்து எழுதி வந்த இவர் 1990-1992ஆம் ஆண்டு காலப் பகுதியில் மாதர் மலர் என்ற பெண்கள் பகுதியை மித்திரனில் தயாரித்து வழங்கினார். 1989-2006ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகளை தயாரித்துள்ளதுடன் நேரலையிலும் கலந்துகொண்டுள்ளார். அத்துடன் வானொலிக்கு சிறுகதைகள் உரையாடல்கள் என்பவற்றையும் எழுதியுள்ளார்.

விருதுகள்

ஊடகத் தாரகை பட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி – 2009.

வன்னி புனர்வாழ்வு அமைச்சின் கௌரவ விருது – 2006.

முஸ்லீம் மீடியா போரத்தின் சிறப்பு விருது – 2010.

மேல் மாகாண சபையின் தமிழ் சாகித்தி விருது - 2009.

கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாபூஷண அரச விருது – 2010.