ஆளுமை:மேரி அகத்தா ஜெயபாக்கியம், நடேசன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:01, 29 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ஜெயா நடேசன், ஆளுமை:மேரி அகத்தா ஜெயபாக்கியம், நடேசன் என்ற தலைப்புக்கு ந...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மேரி அகத்தா ஜெயபாக்கியம், நடேசன்
தந்தை ஜோசப் சின்னத்துரை
தாய் மேரி திரேசா அமிர்தவல்லி
பிறப்பு
ஊர் நவாலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மேரி அகத்தா ஜெயபாக்கியம், நடேசன் யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஜோசப் சின்னத்துரை; தாய் மேரி திரேசா அமிர்தவல்லி. இவர் தனது கல்வியை நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் நெடுந்தீவு சென். சவேரியர் பாடசாலையிலும் நெடுந்தீவு திருக்குடும்பம் கன்னியர் மடம் பாடசாலையிலும் திருநெல்வேலி அரசினர் விவசாயப் பாடசாலையிலும் கற்றார். பின்னர் நெடுந்தீவு கன்னியர் மடம் பாடசாலையில் பகுதிநேர ஆசிரியராகக் கடமையாற்றினர்.

புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்ற இவர் 1922 ஆம் ஆண்டில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இவர் முதல் முதலில் எழுதிய புலம் பெயர்ந்தது வந்ததினால் என்ற கவிதை மண் சஞ்சிகையில் வெளியானது. தாயகச் சமாதானம் என்ற நூல் ஒன்றையும் எழுதி வெளியீடு செய்துள்ளார். மேலும் நெஞ்சம் இனிக்கிறதே பிரிவு பொய்யாகப் போகுதே என்ற தலைப்பில் கவிதை எழுதித் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 69-71
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 369