ஆளுமை:ஸீனத், ரஹ்மா

From நூலகம்
Name ஸீனத்
Pages அப்துல் ரஹ்மான்
Pages உம்மு
Birth
Place வெயங்கொடை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸீனத், ரஹ்மா திஹாரியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் ரஹ்மான்; தாய் ஸீனத். பூகொட, குமரிமுல்லை அஹதிய்யா பாடசாலையின் ஆசிரியையாகவும் அதிபராகவும் இருந்து ஓய்வுபெற்றவர். கவிதை, சிறுகதை, சிறுவர் பாடல்கள், உருவகக்கதைகள் என நூற்றுக்கணக்கான ஆக்கங்களை இலக்கிய உலகிற்கு தந்துள்ளார் ஸீனத். இவரின் எழுத்துலக பிரவேசம் என்பது ஓய்வு பெற்ற பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. தினகரன், நவமணி, சுடரொளி, செந்தூரம் ஆகிய நாளிதழிலும் ஜெஸ்மின் என்ற சஞ்சிகையிலும் இவரது ஆக்கங்கள் ளெிவந்துள்ளன. இவர் ஒரு ஓவியர் என்பது விசேட அம்சமாகும். புறப்படு மகனே! புறப்படு என்ற சிறுவர் பாடல், சிறுவர் கவிதைகளை உள்ளடக்கியதாக இவரது முதலாவது நூல் வெளியானது. எந்தக்காலம் என்ற தலைப்பில் சின்னஞ்சிறு கதைகளை உள்ளடக்கி இவரது மற்றுமொரு நூல் 2013ஆம் ஆண்டு வெளியானது.