ஆளுமை:ஸீனியா, நிலாம்

From நூலகம்
Name ஸீனியா
Pages முஹம்மத் நதீர்
Pages பதுருன்னிஸா
Birth
Place வெலிகம
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸீனியா, நிலாம் வெலிகமை கோட்டேகொடையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மத் நதீர்; தாய் பதுருன்னிஸா. இவரது கணவர் நிலாம். இரண்டு பிள்ளைகளுக்கு தாயுமாவார். வெலிகமை அறபா தேசிய பாடசாலையில் கல்வி கற்றார்.

1985ஆம் ஆண்டு இலக்கிய உலகிற்குள் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். தினகரன், சிந்தாமணி ஆகிய நாளிதழ்களுக்கும் இலங்கை வானொலிக்கும் ஆரம்பகாலத்தில் ஆக்கங்களை எழுதி வந்தார். கட்டுரை, சிறுகதை, மணிக்கவிதை என சிந்தாமணி பத்திரிகைக்கு எழுதி வந்தார். பத்திரிகை தொடர்ந்து வெளிவராத நிலையில் தினகரன் வாரமஞ்சரிக்கு எழுதிய விதி எனும் சிறுகதையின் ஊடாக தன்னை அடையாளத்தை உறுதி செய்து கொண்டார். வானொலியில் பூவும்பொட்டும், மங்கையர் மஞ்சரி, முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸிலும் இவரது ஆக்கங்கள் ஒலிபரப்பானது.