கண்ணில் தெரியுது வானம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கண்ணில் தெரியுது வானம்
1000.JPG
நூலக எண் 1000
ஆசிரியர் இ. பத்மநாப ஐயர்
நூல் வகை பலவினத் தொகுப்புக்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழர் நலன்புரி சங்கம்
வெளியீட்டாண்டு 2001
பக்கங்கள் 520

வாசிக்க

நூல்விபரம்

தமிழர் நலன்புரிச் சங்கத்தின் (நியுஹாம்-இலண்டன்) சார்பில் வெளியிடப்படும் ஆண்டு மலர் இதுவாகும். அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்களின் 91 படைப்புக்களின் தொகுப்பாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 50க்கும் மேற்பட்ட படைப்புக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதி, இன்றைய எழுத்தியக்கத்தின் ஒரு பரிமாணத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை முன்வைக்கும் முயற்சியாகும். சமகாலப் புதிய எழுத்தாக்கங்களைத் தேர்ந்து ஒரு தொகுதியாக வெளியிடும் முன்மாதிரியான இலக்கிய முயற்சியாக ஐரோப்பாவில் 1996இல் தோற்றங் கண்ட TWAN வெளியீட்டின் 5வது தொகுப்பு இது.


பதிப்பு விபரம்
கண்ணில் தெரியுது வானம். இ.பத்மநாப ஐயர் (தொகுப்பாசிரியர்). இலண்டன்: தமிழர் நலன்புரிச்சங்கம், நியுஹாம், Tamil welfare Association, TWAN, 602 Romford Road, E12 5AF, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (சென்னை 5: மணி ஓப்செட்). 520 பக்கம், வண்ணப்படங்கள், ஓவியங்கள், விலை: ஸ்டேர்லிங் பவுண் 10. அளவு: 21 * 14 சமீ.

-நூல் தேட்டம் (# 1816)