தென்கோவை கந்தையாப் பண்டிதர் கவித்திரட்டு

From நூலகம்
தென்கோவை கந்தையாப் பண்டிதர் கவித்திரட்டு
264.JPG
Noolaham No. 264
Author முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, கு. (தொகுப்பாசிரியர்)
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher புலவரகம்
Edition 1972
Pages vi + 72

To Read

Book Description

மலாய் நாட்டு இளைப்பாறிய உத்தியோகத்தர் கொல்லன்கலட்டி உயர்திரு ந.பொ.செ.இலங்கைநாயகம் அவர்கள் விரும்பியவாறு தொகுக்கப்பட்ட இரண்டாவது புலவரக வெளியீடு இதுவாகும். யாழ்ப்பாணத்தில் சிறப்புற்றிருந்த புலவர் பரம்பரையான சேனாதிராய முதலியார் வழித்தோன்றலான தென்கோவை கந்தையாப் பண்டிதர் அவர்களின் மூளாய் மூத்தவிநாயகர் திருவூஞ்சல், புதுவை ஸ்ரீ மணக்குள விநாயகர் ஒருபா வொருபது, புதுவை ஸ்ரீ மணக்குள விநாயகர் பதிகம் (1935), மேலைக்கரம்பொன் முருகவேள் துவாதச தோத்திர மஞ்சரி, யாழ்ப்பாணம் காரைநகர் மணிவாசகர் விழா மலர் வாழ்த்துரை, ஜோர்ச் மன்னர் இயன்மொழி வாழ்த்து (1919), மயிலிட்டி க.மயில்வாகனப் புலவரின் நகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்துச் சிறப்புப் பாயிரம் (1911), சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் கணக்கிய நீதிவெண்பாச் சிறப்புப் பாயிரம் (1914), புன்னாலைக்கட்டுவன் வித்துவான் சி.கணேசையரின் இரகுவம்மிசப் புத்துரைச் சிறப்புப்பாயிரம் (1915), போன்ற பல படைப்புக்களைத் தேடித் தொகுத்து வெளியாகியுள்ள திரட்டே இந்நூலாகும்.


பதிப்பு விபரம்
தென்கோவை கந்தையாப் பண்டிதர் கவித் திரட்டு. கந்தையா பண்டிதர் (மூலம்), கு.முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). 4 + vi + 74 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 1.50, அளவு: 18 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (3462)