நிறுவனம்:கிளி/ பிரம்மம் ஆதிபராசக்தி நாகபூசணி கரடிக்குன்று அம்பாள் ஆலயம்

From நூலகம்
Name பிரம்மம் ஆதிபராசக்தி நாகபூசணி கரடிக்குன்று அம்பாள் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place கரடிக்குன்று
Address கரடிக்குன்று, பூநகரி
Telephone -
Email -
Website -

இவ் ஆலயம் தொன்மை வாய்ந்த ஆலயமாகும். இதன் தோற்றம் குறிப்பிட முடியாத அம்பாளின் தரிசனத்தின் பின் பூசை ஆரம்ப நாள் 05.05.1995 ஆம் ஆண்டாகும். ஆலய வளவில் நீண்ட காலங்களாக ஆலயத்தை பாதுகாக்கும் தெய்வீக சக்தி கொண்ட நாகங்கள் உள்ளன. இவைகள் இரத்தினக்கல் ஒளி கொண்டவை. இதற்கான சான்றுகளும் இக் காட்சிகளை நேரடியாகக் கண்ட சாட்சிகள் பல உண்டு. நோயாளிகள் ,தீய சக்திகளாலும், மந்திர, மாய சக்திகளாலும் , தூண்டப்பட்டோர்களும், அம்பாளை வழிபட்டு விடுதலை பெறும் தலமாகும். இத்தலத்தில் ஆத்மீக பூசையே நடைபெறுகின்றது.

ஆலயத்தில் மூலக் கருவாக பிரம்மம் அம்மா இருக்கிறார்.இதற்கு உருவம் இல்லை. நீரினால் பழுவி மாலை அணிவித்து தீபம் காட்டி மலர்களால் அர்ச்சனை செய்தல், ஆத்மீக பூசையாகும்.பொங்கல்,படையல், நூல் கட்டுதல், தேங்காய் உடைத்தல், திருநீறு இடுதல், பட்டுச்சார்த்துதல், தீய தெய்வ வழிபாடுகள், காவடி எடுத்தல் போன்ற முறைகள் விலக்கப்பட்டுள்ளன.ஆலயத்தின் திருவிழா ஆத்மீக முறைப்படி கொடியேற்றமும், பூசையும் நடைபெறும். ஆலயத்திற்கு தேர் சப்பரம், வாகனம் எதுவும் செய்யக் கூடாது. இன,மத,மொழி,சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பால் மானிடரே தன்னை சுமக்க வேண்டும் என்பது அன்னையின் ஆணை. திருவிழாவில் ஆண், பெண் இருபாலாரும் அன்னையைச் சுமந்து செல்லலாம். சிவப்பு நிற ஆடை அணிய வேண்டும்.