நிறுவனம்:புளியங்குளம் வராகி அம்மன் ஆலயம்
Name | புளியங்குளம் வராகி அம்மன் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | திருகோணமலை |
Place | புளியங்குளம் |
Address | புளியங்குளம் வராகி அம்மன் ஆலயம், திருகோணமலை |
Telephone | - |
- | |
Website | - |
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் நீண்ட கால வரலாற்றுடன் அமைந்துள்ள நம்பிக்கை மிகுந்த ஆலயமே வராகி அம்மன் ஆலயமாகும். சுயம்பு நேசமலர் எனும் பெண்மணி தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாக திருகோணமலை மடத்தடியில் அமைந்திருந்த வராகி அம்மன் ஆலயம் ஒன்றுக்கு 1980களில் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த சமயம் குறித்த ஆலய அம்மன் தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, புளியங்குளத்தில் இவருடைய காணியில் ஆலயத்தை நிறுவி குறித்த குடும்பத்தினர் இன்றுவரை ஆதரித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் புளியமரம் ஒன்றின் நிழலில் அம்மனை ஆதரித்து வந்து, பின்னர் சிறிய ஆலயமாக அமைத்து தற்சமயம் பூரண ஆலயம் அமைப்பதற்கான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது. இந்த அம்மன் ஆலயம் நம்பிக்கை மிக்க ஒரு ஆலயமாகவும், அத்துடன் மிக நீண்ட தூரங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் ஆலயமாகவும் காணப்படுகின்றது.
நவராத்திரி காலப்பகுதிகளில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று வருவதுடன் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை பூஜைகளும் இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக வராகி அம்மன் ஆலயங்கள் மிக குறைவாகவே காணப்படும் நிலையில் இந்த ஆலயம் அனைவராலும் விசேடமாக பார்க்கப்படுகின்றது.