நிறுவனம்:மட்/ ஆரையம்பதி முருகன் கோயில்

From நூலகம்
Name மட்/ ஆரையம்பதி முருகன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place ஆரையம்பதி
Address ஆரையம்பதி, மட்டக்களப்பு
Telephone
Email
Website

ஆரையம்பதி முருகன் கோயில் கிழக்கிலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி எனும் இடத்தில் அமைந்துள்ள பழமையான முருகன் ஆலயமாகும். முற்காலத்தில் காத்தான் என்ற வேடன் ஒருவன் மீன்பிடிக்க வலை கொண்டு வந்தபோது மட்டக்களப்பு வாவிக்கருகில் இருந்த பற்றை ஒன்றினுள் ஒரு கல் விக்கிரகத்தைக் கண்டதாகவும், பின் அதை பயபக்தியுடன் எடுத்துச்சென்று விக்கிரகம் கிடந்த இடத்திற்குப் பக்கத்திலிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் வைத்து பூசித்து வந்ததாகவும், அதுவே காலாகதியில் இக்கோயிலாகியாகவும் ஆலய வரலாறு கூறுகின்றது.

இக்கோயில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய பழமை வாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாகும். இக்கோயிலின் மூலஸ்தானத்தில் வேல் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் கட்டபெற்றபின் முதன் முறையாக 1802ஆம் ஆண்டிலும் இரண்டாம் முறையாக 1864ஆம் ஆண்டிலும் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. இக்கோயில் ஆதியிற் பிள்ளையார் கோயிலாக இருந்து சிலகாலத்தின் பின்பே கந்தசாமி கோயிலென வழங்கப்பட்டு வருகின்றது.

இவ் ஆலயத்தில் வருடாந்தோரும் மகோற்சவம் புரட்டாதிப் பூரணையில் தீர்த்த உற்சவம் அமையும் வகையில் 10நாட்கள் திருவிழா இடம்பெறுகிறது. இவற்றுடன் மாதந்தோறும் வருகின்ற கார்த்திகை நட்சத்திரத்தில் ஒவ்வொருவர் பூசை மாத உபயமாக நிகழும். திருவெம்பாவை உற்சவம் 10வது நாள் தீர்த்தட்துடன் முடிவுறும்.மேலும் இவ்வாலத்தில் தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திரைப்பூரணை, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகைத்தீபம், விநாயக சஷ்டி, திருவாதிரை முதலிய காலங்களில் அலங்கார உற்சவ விழாக்கள் நடைபெறுகின்றன.

Resources

  • நூலக எண்: 10016 பக்கங்கள் 83-89