நிறுவனம்:யாழ்/ அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம்
Name | யாழ்/ அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம் |
Category | பாடசாலைகள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | அளவெட்டி |
Address | அளவெட்டி, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
அளவெட்டி அருணாசல வித்தியலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டியில் அமைந்துள்ளது. நாகமுத்து அருணாசல உடையார் என்பவர் 1910ம் ஆண்டில் இப்பாடசாலையைக் கட்டுவித்தார். ஆரம்பத்தில் இப்பாடசாலை நாகபூசணி வித்தியாலயம் என அழைக்கப்பட்டது.
1910ம் ஆண்டில் 60அடி x 10அடி அளவு கொண்ட ஓலைக் கட்டடமாகவே இப்பாடசாலை அருணாசல உடையார் அவர்களால் அமைக்கப்பட்டது. 1916ம் ஆண்டு இது உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. பாடசாலையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் அமரர் சுப்பையா அவர்களின் தொண்டு அளப்பறியது. 1983ஆம் ஆண்டு இப் பாடசாலையின் ஆரம்பப்பிரிவிற்கான கட்டிடத்தை அரசாங்கம் முற்றாக அமைத்துக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்பாடசாலையின் அதிபராக திரு.கு.ஜெகநாதன் அவர்கள் 2002ம் ஆண்டிலிருந்து பணியாற்றுகின்றார். 400வரையிலான மாணவர்கள் கல்விபயில்கின்றனர். கல்வியில் மட்டுமன்றி விழையாட்டு, கலைப் போட்டிகளில் இப்பாடசாலை மாணவர்கள் சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர்.
Resources
- நூலக எண்: 13940 பக்கங்கள் 86-87