நிறுவனம்:யாழ்/ இணுவில் கந்தசுவாமி கோயில்

From நூலகம்
Name யாழ்/ இணுவில் கந்தசுவாமி கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place இணுவில்
Address இணுவில் மேற்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்
Telephone 0094-21-321 8302
Email
Website www.nochchiyolaikanthan.com/

இணுவில் கந்தசுவாமி கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாம்ம் பிரதேசத்தில் அமைந்த இணிவில் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒல்லாந்தர் காலத்து பழமைவாய்ந்த ஆலயமாக இது விளங்குகின்றது.

1891 ஆம் ஆண்டளவில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக் கோயில் திருப்பணிகளில் ஈடுபடலானார். இவரது முயற்சியினால், இக்கோயிலுக்காக மஞ்ச வாகனம் ஒன்றைச் செய்யும் பணிகள் 1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட சிற்ப வல்லுனர்கள் இப் பணியில் ஈடுபட்டனர். உலகப் பெருமஞ்சம் என ஊரவர்களால் குறிப்பிடப்படும் இப் புகழ் பெற்ற மஞ்சம் 1912 ஆம் ஆண்டில் வெள்ளோட்டம் நிகழ்த்தப்பட்டது. வேறு அடியவர்களின் முயற்சியினால் 1905-1909 காலப்பகுதியில் கோயிலுக்காக மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் அமைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டளவில் மணிக்கோபுரங்களையும் கட்டினர். 1967ல் கருவறைக்கு இரண்டு தளங்களைக் கொண்ட விமானம் அமைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் ஒரு புதிய சித்திரத் தேரும், 1977ல் புதிய சப்பறமும் இக் கோயிலுக்காக உருவாயின. 1953 ஆம் ஆண்டில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றையடுத்து இக் கோயில் பொதுக் கோயிலாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பொது மக்களால் தெரிவு செய்யப்படும் குழுவினர் கோயிலின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்து வருகின்றனர்.

இவ் ஆலயத்தில் தினம் 5 காலப் பூசைகள் நடைபெறுகின்றன. ஆனி அமாவாசையைத் தீர்த்த தினமாகக் கொண்டு முதல் 25 நாட்களுக்கும் மகோற்சவம் நடைபெறும்.

வெளி இணைப்பு