நிறுவனம்:யாழ்/ இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம்

From நூலகம்
Name யாழ்/ இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place இணுவில்
Address இணுவில், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website


இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் இணுவில் எனும் இடத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்து அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் உள்வீதியில் எல்லா கடவுளர்களுக்கு ஆலயமும், வெளிவீதியில் திருமடமும், சின்னத்தம்பிப் புலவர் அரங்கும் அமைந்துள்ளது.

நித்திய நைமித்திய பூசைகளுடன் இக்கோயிலின் மகோற்சவ திருவிழா பங்குனி மாதத்தில் பன்னிரு நாட்கள் நடைபெற்றுகின்றது. பங்குனி உத்தரநாளில் தீர்த்தத்திருவிழாவும் அதன் முதல்நாள் தேர்த்திருவிழாவும் பத்தாம், பதினோராம் நாட்களில் நடைபெறும். மகேசுவர பூசையும் இறுதி நாளில் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது. இவற்றுடன் ஆடிப்பூரம், நவராத்திரி, திருவெம்பாவை, ஆடிப்பூரக் கற்பூரத் திருவிழா என்பனவும் இடம்பெறுகின்றது. நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் புகழ்பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் அம்பு போடுதல் மற்றும் வன்னிமர வாழை வெட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருவெம்பாவை வழிபாடு நாள்தொறும் அதிகாலை மூன்று மணி தொடக்கம் ஆறு மணிவரை நிகழும். நவராத்திரியை அடுத்து நவசக்தி சிறப்பு வழிபாடும் பூரணை நாளில் திருவிளக்கு வழிபாடும் நிகழ்கின்றன.

ஒல்லாந்தர் காலத்தில் வாழ்ந்த இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இச்சிவகாமி அம்மன் மீது சிவகாமியம்மை பதிகம், சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை சதகம், ஊஞ்சல், இரட்டைமணிமாலை, சிவகாமியம்மை துதி ஆகியவற்றை பாடியுள்ளார்.

வெளி இணைப்பு